கீதையின் மறுபக்கம் - இரண்டாம் பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam இரண்டாம் பதிப்புரை ‘கீதையின் மறுபக்கம்' நூல் வெளிவந்தவுடன், அதைப் படிக்காமலேயே - ஏன் பார்க்காமலேயும்கூட - அதை அரசு தடை செய்யவேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விண்ணப்பம் தயாரித்து, ஒரு தூதுக்குழு, தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்தார்கள் - இந்துமத, பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினரும், ஒரு பார்ப்பனப் பத்திரிகையாளரும். ''அப்படி...