நமக்கு ஏன் இந்த இழிநிலை?
தலைப்பு | நமக்கு ஏன் இந்த இழிநிலை? |
---|---|
எழுத்தாளர் | வீ எம்.எஸ். சுபகுணராஜன் |
பதிப்பாளர் | கயல் கவின் |
பக்கங்கள் | 423 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.200/- | ரூ.190/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/namakku-yen-intha-izhinilai.html
இங்கு சாதிதான் அனைத்து இழிவுகளுக்குமான காரணம். சாதி எனும் இழிவிலிருந்து மனிதர் மீள்வதற்கான எளிய வழி பிறப்பால் உனக்கு மேலான ஒருவனோ அல்லது உனக்கு கீழான ஒருவனோ இல்லையென உணர்வது, ஏற்பது, நடைமுறைப்படுத்துவது. மிக எளிமையாகத் தோன்றும் இந்தத் தீர்வு உணர்வாக மாறுவதும், செயல்படுவதும் எளிதல்லதான். ஏனெனில் எளிதாக தோன்றும் தீர்வும் மிக நுட்பமான, ஆழமான விளைவுகளைக் கொண்டது. மேல் கீழ் எனும் படிநிலை தகர்ந்த சாதி இருப்பு, அதன் உள்ளார்ந்த பண்பை இழந்துவிடுகிறது. சாதியத்தின் உள்ளார்ந்த பண்பை அழிப்பதுதான் சாதியை அழிப்பதற்கான வழி. சாதி இழந்த நிலைதான் சுயமரியாதை பெறும் நிலை.
மேற்சொன்னது போன்ற தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து வி.எம்.எஸ்.சுபாகுணராஜன் அவர்கள் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். சாதி சங்க மாநாடுகளுக்கு அழைப்பு பெற்ற பெரியார் கூட்ட மேடைகளில் தனது சாதி ஒழிப்பு பற்றிய கண்டனத்தை தெள்ளத்தெளிவாக பதிவிட்டுள்ளதாக இந்நூல் விவரிக்கிறது.
புத்தக அறிமுகம்: தோழர் மீ. த. பாண்டியன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: