கீதையின் மறுபக்கம் - ஆறாம் பதிப்புக்கான பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam


ஆறாம் பதிப்புக்கான பதிப்புரை

"கீதையின் மறுபக்கம்” என்ற தலைப்பில் 1998இல் இந்நூல் முதல் பதிப்பாக வெளி வந்தது. கீதை பதிப்புகள் - பலவும் - இதற்கு ஆதார நூல்களாகப் பயன்பட்டன.

மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்த பதிப்புகளில் மேலும் கூடுதலாக ஆய்வுக் கட்டுரைகளும் சேர்க்கப்பட்டன.

இதனை எப்படியாவது மக்கள் மத்தியில் அறிமுகமாகாமல் தடுக்க வேண்டும் என்று சிலர் நினைத்து அதற்கேற்ப பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. விளைவு..? அவர்களுக்குத் தோல்வியே! மக்கள் பதிப்பு என்பது சிறப்பானதாக ஆயிற்று.

கீதையைப்பற்றி நமது கலைஞர் அவர்கள் கண்டித்துப் பேசினார் என்பதற்காக இந்து முன்னணித் தலைவர் திரு. இராம கோபாலன் கலைஞர் வீட்டிற்கு கோபாலபுரத்திற்குச் சென்று அவருக்கு கீதை நூலைத் தந்தபோது, அவரை வரவேற்று கலைஞர் அவர்கள், உடனடியாக எனது "கீதையின் மறுபக்கம் " நூலினை அவருக்குத் தந்து, ''இதனையும் நீங்கள் படியுங்கள்” என்று சொல்லி அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்கள்!

இது ஏடுகளில், ஊடகங்களில் செய்தியாக வந்தது; கலைஞர் அவர்களே என்னை தொலைபேசியில் அழைத்து இதனைத் தெரிவித்தார்கள், நான் நன்றி கூறினேன்,

பல்வேறு ஊடகச் செய்தியாளர்களும் என்னிடத்தில் இதுபற்றி பேட்டி கண்டனர்! தனிப் பதிப்பு போடும் அளவுக்கு பல்லாயிரம் பிரதிகள் செலவாயின. இந்நூலின் சிறப்புக்கு - அங்கீகாரத்துக்கு இந்நிகழ்வு ஒன்றே போதாதா?

புதிய பதிப்பில் "ஆத்மா'' பற்றிய பல்வேறு அரிய செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளன.

வாசகர்களின் கருத்துரைகளை, விமர்சனங்களை ஏற்க என்றும் காத்திருக்கிறோம்.


- கி.வீரமணி
09.08.2009

சென்னை

Back to blog