நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்
புரட்சி என்பது உங்களிடம் வேண்டுவது உணர்ச்சி வேகத்தையோ, மரணத்தையோ அல்ல. மாறாக உறுதியான போராட்டத்தை, தியாகங்கள் மற்றும் இன்னல்களையே அது வேண்டுகிறது. தனிப்பட்ட சுகபோகங்களைப் பற்றிய கற்பனைகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன் செல்ல வேண்டும். இதற்குத் துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனஉறுதியும் வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்கள் தன்னம்பிக்கையைக் கலைத்து விடக்கூடாது. எந்தத் தோல்விகளும் துயரங்களும் உங்கள் உள்ளத்தைத் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும், உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை அழித்து விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றி கரமாக மீண்டு வரவேண்டும். தனியொரு புரட்சியாளர் அடையும் இவ்வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்கச் சொத்து.
புரட்சி நீடூழி வாழ்க!
- பகத்சிங்