.... பொதுத்தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப் பட்டாலும் மெஜாரிட்டி ஓட்டர்களாகிய உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஆதரவைப் பெற்றவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் சுதந்தரங்களை விட்டுக் கொடுத்து உயர்ந்த சமூகத்தாரின் ஆதிக்கத்திற்குச் சாதகமாய் இருக்கின்ற அடிமை மனப்பான்மை உடையவர்களும் தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று சொல்லுகிறோம்.
.... உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதாகயிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்றுதான் உறுதியாக நாம் கூறுவோம்....
- தோழர் பெரியார்