ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-2
ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-2
தலைப்பு |
ஏழு தலைமுறைகள் |
---|---|
எழுத்தாளர் | அலெக்ஸ் ஹாலே |
பதிப்பாளர் | சிந்தன் புக்ஸ் |
பக்கங்கள் | 272 |
பதிப்பு | ஆறாம் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.150/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/ezhu-thalaimuraigal.html
பதிப்புரை-2
ஆங்கிலத்தில் முதன் முதலில் இந்நூல் வெளியான பொழுது தொடராக ஒளிபரப்பானபொழுது வெள்ளை மக்களை கலக்கமுற செய்தது. அமெரிக்காவின் வரலாறானது நயவஞ்சகம், சூழ்ச்சி, கொடுஞ்செயல்கள், அடக்குமுறை, சித்திரவதை என்று கறைபடிந்த வரலாறாகவே காணக்கிடக்கிறது.
வரலாற்றைச் சுவையான ஒரு நாவலாக இயற்றி வெற்றி பெற்றிருக்கிறார் இதன் ஆசிரியர். இதன் தமிழ்ப் பதிப்புக்கு வந்த கருத்தாக்கக் கடிதங்கள் எம்மை வியப்பில் ஆழ்த்தின. எவ்வளவு நுணுக்கமாக நமது வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அக்கருத்துரைகள் அமைந்திருந்தன. முதல் பதிப்பு விற்று தீர்ந்த உடனேயே இரண்டாம் பதிப்புக்குத் திட்டமிட்டேன். ஆனால் சூழ்நிலைகள் இடம் தராததால் தாமதமாக இவ்விரண்டாம் பதிப்பு இப்பொழுது வெளியாகிறது.
வாசகர்கள் தாங்கள் வாசித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் சுற்றத் தாரிடம் தாருங்கள். வாசிக்கச் செய்யுங்கள். வாசிக்க முடியாதவர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள். புதுமையான, அதே சமயத்தில் புத்தெழுச்சி யூட்டும் ஓர் உணர்வு நிலைக்கு இந்நாவல் உங்களை இட்டுச்செல்வதை அறிவீர்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
15 - 10 - 2001 எம்.பாலாஜி