
இளைய சமுதாயம் எழுகவே
கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக குமுறும் வயிறுகளின் போர் வழக்கமாக ஒலிக்கும் சிறப்பு, கலைஞரின் சொற்பொழிவுக்குத்தான் உண்டு. அஞ்சுகத் தாப் ஈன்றெடுத்த அரிமாவின் முழக்கம் - இந்தியாவின் தென்கோடியில் ஒலித்தாலும் இமயம் வரை சென்று எதிரொலிக்கும் ஆற்றல் வாய்ந்தது. குற்றால அருவியெனத் துள்ளி வரும் தெள்ளுதமிழ் நடை, வற்றாத சிந்தனையின் வளம் பொதிந்த கருத்துக்கள், அங்கங்கே சுவை சேர்க்கும் அழகிய உவமைகள், உருவகங்கள், சொற்பொழிவின் நோக்கத்துக்கு அரண் சேர்க்கும் கிளைக் கதைகள்; இவையனைத்தும் சேர்ந்த கலைஞரின் சொற்பொழிவு, தமிழினத் தைத் தட்டியெழுப்பும் எழுச்சிப் பண்ணாக கிட்டத்தட்ட கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழகமெங்கும் ஒலித்து வருகின்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.