
ஆரியமாயை சிவாஜி கண்ட இந்து ராஜியம்
ஆரியமாயை சிவாஜி கண்ட இந்து ராஜியம்
மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளையும், மனித வாழ்விற்கு சிறிதும் பயனளிக்காத இதிகாச புராண நாடகங்களை மட்டும்மே மக்கள் பார்க்க வேண்டியிருந்த சூழலில், சமூக அக்கறையும், சாதி பேதங்களை ஒழிக்கும் சீர்திருத்த சிந்தனைகளும் கொண்ட முத்தான கதைகளையும், சத்தான நாடகங்களையும் படைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதில் ஒன்றுதான் “சந்திரமோகன்” அல்லது “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” எனும் இந்த நாடகப் படைப்பு. இதில் மராட்டிய வீரனாக வேடமேற்று நடித்த நடிகரைப் பாராட்டி தந்தை பெரியார் அளித்த “சிவாஜி” என்ற பட்டமே, பின்னாளில் அவர் வெள்ளித்திரையில் சிவாஜி கணேசனாக அறிமுகமாகும் ஆரம்பப் புள்ளியாகும். பேரறிஞர் அண்ணா காகபட்டர் வேடமேற்று நடித்தது குறிப்பிடத்தக்கது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.