திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான். இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
‘‘கலைஞரின் முதல் ஆட்சியே தமிழகத்தின் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்த வித்திட்டது. அத்துடன் உணவு, கல்வி, மருத்துவத்தை எல்லோருக்கும் பரவலாக்கி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. இந்தியாவிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் சிறந்த மாநிலமாக இருப்பது தமிழகம்தான். மாநிலத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் துறைகள் மூலமே கிடைக்கின்றது. தனிநபர் வருமானத்திலும் வேலைவாய்ப்பிலும் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகவே இருக்கிறது தமிழகம். இவையெல்லாம் திராவிட ஆட்சி அரசியலின் இடையீட்டால், அதுவும் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கொள்கைகளால்தான் சாத்தியமானது...’’ என்று சான்றுகளுடன் முன்வைக்கிறார் ஜெயரஞ்சன். |
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.