அயோத்திதாசர் ஆய்வுகள் - பகுதி 1
முற்காலம் இந்தியாவில் குடியேறி, தற்காலம், பிராமணர், வேதியர், அந்தணர், இருபிறப்பாளர், ஸாஸ்திரி, பூதேவர் என்று பலவித மரியாதைப் பெயர்களோட, வழங்கி வாழ்ந்து வரும் ஒரு சிறு கூட்டத்தார்களாகிய பாரசீக தேச சோம்பேறிகளுக்கே மறைமுகத்தோரென்று புகழ்ந்து, அவர்களின் பாதாரமே துணை என நம்பி மோசம் போய்க் கொண்டிருக் கிறார்கள். பிராமணர்களின் துர்போதனையால் எழுதப் பட்ட ஒவ்வொரு நூல்களும், தங்களை யுயர்த்தி, இந்திய பூர்வக் குடிகளாகிய பவுத்தர்களைக் தாழ்த்திக் கூறி வைத்துள்ளது. கற்றார்க்குக் கைக்கண்ணாடியாகும். எத்தேசத்திலாயினும் ஒரு பவுத்தன் தலை சிறந்து குடி களிடத்து அன்பு பாராட்டி வருவானாயின். அதனை யறிந்த பார்ப்பனர்கள் தங்கள் குலத்தவர்களை அல்லது காட்டு மனிதராகிய சூத்திரர்களை (இந்துக்களை) ஒருங்கே சேர்த்துவந்து (அவதாரஞ் செய்து) அவனைக் கெடுத்து, அந்நாட்டில் தங்களது பிராமண மதத்தைக் கைக்கொள்ளச் செய்து வருவார்கள். வந்துக் கொண்டிருக்கிறார்கள்.