Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 9, 2019

    ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - ஆய்வுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum  ஆய்வுரை முனைவர் அ. அந்தோணி குருசு மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் தூயவளனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி இன்று, அண்டத்தின் மூலத்தைத் தேடும் முனைப்பான முயற்சியில் அறிவியலும் மெய்யியலும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் புதுயுகம் பிறந்துள்ளது. பெருவெடிப்புக் கொள்கைப்படி, முதல் மூன்று நிமிடங்களில் கோளம் வெடித்தபின் எப்படி எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் துகள்கள் உருவாயின என...

    Read now
  • நவம்பர் 9, 2019

    ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - மதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum  மதிப்புரை “ஆசீவகமும் ஐயனார் வரலாறும்”என்ற தலைப்பிலமைந்த தம் நூலிற்கு மதிப்புரை ஒன்றை வழங்க இயலுமா? எனப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். பேராசிரியர் மீதும் அவர்களின் ஆய்வுகள் மீதும் நான் வைத்திருந்த மதிப்பின் காரணமாக மதிப்புரை வழங்குவதற்கு உடன் இசைந்தேன். இந்தியத் தத்துவவியலிலோ, தர்க்கவியலிலோ தமிழ் இலக்கியத்திலோ அல்லது...

    Read now
  • நவம்பர் 9, 2019

    ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - ஆசிரியரைப் பற்றி…

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum  ஆசிரியரைப் பற்றி… பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நல்ல கவிஞர், சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த ஆய்வாளர் தமிழ் இன - மொழி பண்பாட்டு மேன்மையை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர். கவிதை, சொற்பொழிவு - ஆய்வு என மூன்று துறைகளிலும் பொற்பதக்கங்களையும், பொற்கிழிகளையும் பரிசாகப் பெற்றவர். எழுதிய நூல்கள் 17. பதிப்பித்தவை 6....

    Read now
  • நவம்பர் 8, 2019

    சாதியின் குடியரசு - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sathiyin-kudiyarasu  பதிப்புரை ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர். தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர், தோழர், விமர்சகர். ஃபாசிச சக்திகளின் தாங்கவியலாத எதிரி. அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள், அதன் தெளிவான வெளியீட்டுத் திறன், வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண்டே அவர் தனது...

    Read now
  • நவம்பர் 8, 2019

    சாதியின் குடியரசு - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sathiyin-kudiyarasu  முன்னுரை உலகை ஒரு பழமைவாத அரசியல் கவ்விப் பிடித்துள்ளது போல் தெரியும் இக்காலத்தில் இந்தியா ஒரு குடியரசாக தனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நமது ஜனநாயகப் பரிசோதனையின் பொருளாதார வளர்ச்சி மக்கள் போராட்டங்களோடு தொடர்புடையது, கடைக்கோடி மனிதர்களுக்கும் வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு கூட...

    Read now
  • நவம்பர் 8, 2019

    சாதியின் குடியரசு - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sathiyin-kudiyarasu  ஆசிரியர் குறிப்பு ஆனந்த் டெல்டும்டே மஹாராஸ்டிராவில் ரஜூர் என்ற சிறு நகரில் பிறந்தவர். பொறியாளர், அஹமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (IIM) இல் எம்.பி.ஏ பட்டமும், முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றவர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநர், பெட்ரோநெட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (M.D), என உயர் பதவிகள்...

    Read now
  • நவம்பர் 8, 2019

    சாதியின் குடியரசு - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sathiyin-kudiyarasu  பொருளடக்கம் பதிப்புரை முன்னுரை அறிமுகம் இட ஒதுக்கீடு - ஒரு பொறியும், பெருநெருப்பும் சாதி, வர்க்கம் இடையிலான முரணியக்கம் - சாதி என்பது ஒரு மூடுண்ட வர்க்கம் அம்பேத்கர், அம்பேத்காரியர்கள், அம்பேத்காரிசம் - தலித் பேந்தர்கள் முதல் காவி அடிமைகள் வரை கேளா ஒலியாக வன்முறை - கைர்லாஞ்சி, காங்லியவாடா, துலினா, பானா...

    Read now
  • நவம்பர் 8, 2019

    பெரியாரும் பூனா ஒப்பந்தமும் - பதிப்புரை

    .... பொதுத்தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப் பட்டாலும் மெஜாரிட்டி ஓட்டர்களாகிய உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஆதரவைப் பெற்றவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் சுதந்தரங்களை விட்டுக் கொடுத்து உயர்ந்த சமூகத்தாரின் ஆதிக்கத்திற்குச் சாதகமாய் இருக்கின்ற அடிமை மனப்பான்மை உடையவர்களும் தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று சொல்லுகிறோம்.

    .... உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதாகயிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்றுதான் உறுதியாக நாம் கூறுவோம்....

    - தோழர் பெரியார் 

    Read now
  • நவம்பர் 8, 2019

    ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-2

    ஆங்கிலத்தில் முதன் முதலில் இந்நூல் வெளியான பொழுது தொடராக ஒளிபரப்பானபொழுது வெள்ளை மக்களை கலக்கமுற செய்தது. அமெரிக்காவின் வரலாறானது நயவஞ்சகம், சூழ்ச்சி, கொடுஞ்செயல்கள், அடக்குமுறை, சித்திரவதை என்று கறைபடிந்த வரலாறாகவே காணக்கிடக்கிறது.
    Read now