
புதுவை முரசு இதழ்த் தொகுப்பு - தொகுதி 3
புதுவை முரசு இதழ்த் தொகுப்பு - தொகுதி 3
அன்று தன்மானக் கொள்கை குன்றாக விளங்கிய சா.குருசாமி, ஓடும் தொடர்வண்டி தடதட வென ஓசை எழுப்புவது போல மடமட வென மேடையில் கொட்டும் 'போட் மெயில்' பொன்னம்பலனார் ஆகியோர் "புதுவை முரசு இதழின் ஆசிரியர்களாக விளங்கினர். இவர்களும், புதுவை கண்ட செயல்வீரர்கள் நோயல், கவிஞர் சிவப்பிரகாசம். முதலான பெருமக்களும் அன்று. சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பிட ஆற்றிய தொண்டினைப் பற்றி என்றும் தமிழுலகம் அறிய ஏற்ற சீரிய பணியை, வாலாசா வல்லவன் பொறுப்புடன் செய்து முடித்துள்ளது, மிகப்பெரிய தொண்டாகும். இவருடைய இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என விழைகிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.