Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மேடையெனும் வசீகரம்

Original price Rs. 0
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Current price Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00

மேடையெனும் வசீகரம்

திருச்சி சிவா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலவிவரும் ஓர் அறிவுஜீவி! தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசக்கூடிய பேராற்றல் படைத்தவர்! பாராளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது அந்த
மண்டபத்தில் உள்ள அத்தனை பேருடைய கண்ணும் – காதும் அவர் மீதே மொய்த்திருக்குமாம்! திருநங்கைகளின் உரிமைக்காக இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒரு மைல்கல்! “மேடையெனும் ‘வசீகரம்’ என்ற புத்தகத்தில், தலைவர்கள், அரசியல். சமூகம் மற்றும் இலக்கியம் ஆகிய தலைப்புகளில் மூழாங்கிய பேச்சுக்களை தொகுத்திருக்கிறார்! இந்தப் புத்தகம், களப்பணி ஆற்றும் இளைஞர்களுக்கும் நாளைய சந்ததியினருக்கும் பயன் பெறக்கூடிய வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை! அவர் மேடைதோறும் ஆற்றிய உரையின் தொகுப்பு தஞ்சாவூர் கதம்பம் போல் மிக அழகாக இருக்கிறது!
துரைமுருகன் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

திருச்சி சிவாவின் “மேடையெனும் வசீகரம்” என்கிற இந்தத் தொகுப்பு வெறும் சொற்பொழிவுத் தொகுப்பு அல்ல; கருத்துக் கருவூலங்கள். பல்வேறு தருணங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரும்பாலும் இலக்கியத் தன்மை கொண்டவை: ஆழ்ந்த பொருள் பொதிந்தவை. மேடைகளில் மடைதிறந்த வெள்ளமாய் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் வெறும் ஒலியோடு இருப்பின் காலத்தில் கரைந்துபோய்விடும். கல்வெட்டாகத் திகழும் வண்ணம் நூல் வடிவில் வெளியிடும் அவரின் முயற்சி பாராட்டிற்குரியது. அவர் பரந்த படிப்பாளி என்பதற்கும், சிறந்த இலக்கியவாதி என்பதற்கும் தொகுப்பெங்கும் பளிச்சிடும் உரை மின்லைகளே சாட்சி.
கவிப்பேரரசு வைரமுத்து

இதில் பெரியார், தீப்பு சுல்தான். வாலி. கி.ராஜநாராயணன் ஆகியோரைப் பற்றிய உரைகள் இருக்கின்றன. இவற்றை ஒருவரே பேசி வெற்றி பெறமுடியும் என்பதுதான் சிவாவின் சிறப்பு. பெரியாரைப் பேசுபவர்களால் வாலியைத் தொட முடியாது. கி.ரா.வைப் பேசுபவர்களால் அம்பேத்கரைத் தொட முடியாது. ஆனால் அரசியல், இலக்கியம், வரலாறு, சினிமா, தன்னம்பிக்கை, வாழ்க்கை, குடும்பம் என எல்லாவற்றையும் எல்லா மேடைகளிலும் பேச எல்லாராலும் முடியாது. திருச்சி சிவாவால் முடியும் என்பதற்கு எத்தனையோ மேடைகள் காட்சியகம். அதற்கு இந்தப் புத்தகம். சாட்சியம்.
பா. திருமாவேலன் தலைமை செய்தி ஆசிரியர், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

திருச்சி சிவா அவர்களின் மேடைப்பேச்சின் பிரமிக்க வைக்கும் அம்சம் அவரின் சொல் தேர்வு, பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் தன்மை இன்மை அறிந்து சொற்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லவர் அவர். அவரின் பேச்சில் மின்னிய எத்தனையோ வைரங்களின் தொகுப்பு இந்த நூல். அவரின் ஞாபக அடுக்குகளின் பெட்டகம். இந்த மேடைத் தென்றல் என்றென்றும் வீசட்டும். இன்னும் உயர உயரப் பறக்கட்டும்! வருங்காலப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழட்டும்!
பேரா. பாரதி பாஸ்கர் பட்டிமன்ற சொற்பொழிவாளர்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் திருச்சி சிவா MP
பக்கங்கள் 392
பதிப்பு முதற் பதிப்பு - அக்டோபர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

எதிர்பாராத திருப்பம்!

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

எதிர்பாராத திருப்பம்! நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில். மிசா சட்டத்தின்கீழ் ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

முரசொலியின் மடியில் தவழ்ந்தவை

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

முரசொலியின் மடியில் தவழ்ந்தவை சகோதரர் சிவாவின் பேச்சாற்றல், அவரது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.இவை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரது எழுத்தாற்றல்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

கேளுங்கள்! சொல்கிறேன்…

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

கேளுங்கள்! சொல்கிறேன்… திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - கட்டுரைகள்

கருப்புப் பிரதிகள்
In stock

திருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொ...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

திராவிடத்தால் வாழ்கிறோம் (பாகம் 3)

முத்தமிழறிஞர் பதிப்பகம்
In stock

திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையை, இளைய தலைமுறைக்கு  எடுத்துச் சொல்லும் படக்கதை வடிவிலான நூல்

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00