
மனித சமூக சாரம்
மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசையிலிருந்து, பீத்தோவனின் செவ்வியல் இசை வரை, உழைப்பாளர் பாட்டுகளிலிருந்து ஷேக்ஸ்பியரின் கவிதை வரை - அனைத்துமே மானுட உழைப்பையே மூலாதாரமாகக் கொண்டுள்ளன என்பது மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.