
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி அவர்களுக்கான உயிர்ச் சிலையாக இந்தப் புத்தகம் எழுந்து நிற்கிறது. பழுத்த ஆத்திகர், தூய்மையான காங்கிரஸ்காரர், சரியான இந்திய விடுதலைப் போராளி, காந்தியின் பக்தரான அவரை பிராமண துவேஷி, வகுப்பு துவேஷி, கருப்புச் சட்டை அணியாத ஈ.வே.ரா என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள், தேசிய பத்திரிகைகள் பட்டம் சூட்டி பதவியில் இருந்து இறக்கினார்கள்; அரசியலைவிட்டே துரத்தினார்கள். கதர் சட்டை மனிதருக்குக் காவலுக்கு இருந்தது கருப்புச் சட்டைகள். இதை விமர்சித்து திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது.நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா,தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை என தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.