திராவிடம் என்றால் என்ன ?
ஒரு பக்கம் திராவிடத்தால் தமிழகத்துக்கு ஒன்றுமே பயனில்லை என்று அப்பட்டமாய் மறைக்கிறார்கள். மறுபக்கம் திராவிடம் இல்லையென்றால் தமிழன் இப்போது வரை கோவணம்தான் கட்டிக் கொண்டிருந்திருப்பான் என மிகைப்படுத்துகிறார்கள். இந்த இரு தரப்பு கோமாளிகளுக்கும் நடுவே திராவிடத்துக்கு மரியாதை தர வேண்டியுள்ளது.
தமிழகத்தின் சரியான எதிர்காலத்துக்கான கருவி திராவிடம்தான். அதை நாம் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அதைப் பற்றிய துல்லியமான புரிதல் அவசியம். திராவிடம் 2.0, திராவிட மாடல் எல்லாம் வந்து விட்ட காலத்தில் உண்மையில் நாமறிந்து கொள்ள வேண்டியது இன்றைய சூழலில் திராவிடத்தின் பொருத்தப்பாடு என்ன என்பது.
எவை திராவிடம் என்பதை மட்டுமின்றி எதுவெல்லாம் திராவிடம் இல்லை என்பதையும் இப்புத்தகத்தின் கட்டுரைகள் பேசுகின்றன. பெரியார் மீதும் கலைஞர் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. திராவிடர்களுக்கு மயிர்க்கூச்செரியும் கணங்கள் இந்நூலில் உண்டு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.