
ஜாதி கெடுத்தவள்
கடந்த 55 ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் திராவிடர் இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் ஒரு சிறிய திரட்டுதான் இந்த புத்தகம். இது குறிப்பாக குடும்பப் பெண்கள் சமூகப் பணியில், இயக்கப் பணிகளில் ஈடுபட முடியாது, இயலாது என்று கூறுபவர்களுக்கு விடை அளிப்பதாக, ஈடுபட எண்ணுபவருக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். இந்த சமூகம் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது? இதற்கு யார் காரணம் என்ற கேள்விகளுக்கும் இதில் பதில் கிடைக்கும். அதனால் சிறுபயனாவது விளையும் என நான் கருதுகிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.