
இந்தியா விலைபோகிறது
புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுத்து முகர்ந்து பார்த்து குறை சொல்லும் போக்கு கட்டாயம் கைவிடப்பட வேண்டிய ஒன்றாகும். எவ்வித அரசியல் புரிதலும் அற்ற, 'திடீர்' தலைவர்கள், தலைகால் தெரியாமல் பிதற்றித் திரிவதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. பூசிய சாயங்கள் அடுத்த மழையில் கரைந்ததும் உண்மை நிறம் வெளிப்பட்டு விடும் வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சுயநல எதிர்பார்ப்புகள், ஆசைகள் எதுவுமின்றி, இலட்சியத்துக்காக இழப்புகளைச் சகித்துக் கொண்டு இயங்கும் இயக்கங்களிடம் இவ்வகைப் போக்கு வேண்டாத ஒன்று எதிரிகளிடம் எய்ய வேண்டிய கணைகளைத் தோழமைகள் மீது எய்வது தேவைதானா?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.