
அறிந்தும் அறியாமலும்
இணையத்தளத்தில் 33 வாரங்கள் வெளிவந்த தொடர்தான், இப்போது அதே பெயரில் நூலாகி உள்ளது. இந்த வகையில் இது என் மூன்றாவது முயற்சி. 2012இல், ஈழம் பற்றிய நூலும், 2013இல், சிங்களன் முதல் சங்கரன் வரை என்னும் நூலும் இப்படித்தான் உருவாயின. அவை இரண்டும் என் வலைப் பூவில் வெளியான தொடர்கள். இது, எண்ணிறந்த வாசகர்களைக் கொண்ட ஒன் இந்தியா என்னும் வலைத்தளத்தில் வெளிவந்த தொடர். அதனால் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான வர்களால் படிக்கப்பட்ட நூல் என்னும் பெருமை இதற்குண்டு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.