
பெண்களைப் போற்றிய தந்தை பெரியார்
அவருடைய பணிகளில் முதன்மையானது எதுவென்றால், பெண்களின் முன்னேற்றத்துக்கான வழிகளை துணிச்சலாக வெளியிட்டதுதான்.
பெண் என்பவள் ஆணுக்கு சரிநிகர் சமம் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பெரியார்.
அவர் வலியுறுத்திய பெண்ணுரிமைகள் அனைத்தும் அவரின் வாழ்நாளிலேயே சட்டங்களாகி, அவர்களை சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உறுதிப்படுத்தியது.
இன்று சொத்துரிமையில் பெண்களுக்கு சமஉரிமை கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்பில் பெண்கள் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதல் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
பெரியாரின் நிஜமான முகத்தை பெண்கள் மட்டுமல்ல அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சித்தரிக்க முயற்சி செய்யும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.