Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

சிந்து முதல் கங்கை வரை - புத்தகம் பற்றி...,

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
புத்தகம் பற்றி...,

1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும்

ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார்

வால்கா வெளிவந்த சில தினங்களுக்கு பின் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் என்று சொன்னார்

மனித நாகரிக வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் வாங்கி படிக்க வேண்டியவை ஆகும்

இவைகள் வெறும் கதைகள் அல்ல சமுதாய வளர்ச்சியையும் சரித்திரத்தையும் காலங்களையும் நிர்ணயித்து கதை உருவிலே எழுத பட்டிருப்பதால் சில இடங்களை படிக்கும் போது சரித்திர ஏடுகள் படிப்பதை போன்ற உணர்சிகளைத் தரலாம்

சரித்திரத்தை படிப்பதால் ஏற்படும் சலிப்பும் எற்படாத வன்னம் கதை உருவிலே தந்திருப்பதாலேயே வாசகர்களிடையே இத்தகைய வரவேற்பை பெற்றது இந்த நூல்.

இந்த கதையின் முடிவுகளை பற்றி ஆதார பூர்வமாக தர்க்கம் செய்வது எனது சக்திக்கும் அப்பாற்பட்டது இவற்றின் கருத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்ய ராகுல் ஜி போன்று ஞான கடலாய் இல்லாவிட்டாலும் அவரை அடுத்து செல்லக் கூடிய ஞான மாணவனாக இருக்க வேண்டும். ராகுல் ஜியின் பேனா கற்பனை வடிவத்தால் பல வருடங்கள் முயற்சியினாலே கிடைத்தது இந்த படைப்பு.

சமூகம், தத்துவம், வரலாறு, அறிவியல், பயண நூல், விலகி வரலாறு, நாடகம், ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீர்வு ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் எழுதிய இரண்டாவது நாவல்.வாசலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில், வைசாலிக் குடியரசின் பிரதம சேனாதிபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தார். நண்பர்கள் வியந்தனர்; ஆராய்ச்சியாளர் உவந்தனர். முற்போக்கு உலகம் மகிழ்ந்தது.

 ராகுல்ஜி எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு, அரையாண்டு. காலாண்டு, மாத-வார- நாளிதழ்கள் பல வெளிந்தன. எழுதிக் குவித்த நூல்கள் ப.

 வைதீக வைணவராக வாழ்க்கையில் காலடி வைத்தபின் பெளத்த சமயத்தால் கவரப்பெற்று இறுதியில் மார்க்சியம்-லெனினியம் என்னும் பெருங்கடலில் தோய்ந்து மாமனிதரானார்.

Previous article பெண்ணதிகாரம் - நூல் விமர்சனம்
Next article பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர் - பொருளடக்கம்