உண்மை இந்து மதம்
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
பெரியார் பிரச்சாரம் என்ன? எல்லாவிதத்திலும் நம்மைப்போன்றே இருக்கும் மனிதர்கள் கோயிலுக்குள் வந்தால். நாமும் நம் கடவுளும் தீட்டுப்பட்டு பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றால், இந்தக் கடவுள் நம் பக்தியை ஏற்று. நாம் இறந்தபின் நம்மை சொர்க்கத்தில் தேவர்களுடன் எப்படிச் சேர்க்கும்? அந்தத் தேவர்களும் அங்கிருக்கும் கடவுளும் நம்மால் தீட்டுப்பட்டு பாவத்தையடையாதா? இதைச் சொன்னால் சைவமும், வைணவமும் பறந்து போய்விடுமா? நியாயத்தையும், நெறியையும் சொன்னால் பறந்து போகும்படியான அவ்வளவு இலேசான கடவுளும், மதமும் இருந்துதான் என்ன பயன்? நம் தெய்வங்களில் சிவத்திற்குப் பிச்சை ஆண்டி என்று பெயர், விஷ்ணுவிற்குக் கபட நாடக சூத்திரதாரி என்று பெயர். பிச்சையெடுப்பதும், கப்பு நாடக சூத்திரம் செய்வதும் தொழிலாகக் கொண்ட கடவுளையுடைய நாமும் நம் நாடும் அந்தத் தொழிலை விட்டுக் கடைத்தேறவழி ஏதாவதுண்டா? அப்போப்பட்ட அந்தக் கடவுளும், அது சம்பந்தமான ஆபாசக் கதைகளும் ஒழிய வேண்டுமென்றே ராமசாமிப்பெரியார் பிரசாரம் செய்கிறார்.