Skip to content

உணவு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி

Save 5% Save 5%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 95.00
Rs. 95.00 - Rs. 95.00
Current price Rs. 95.00

 

உணவு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி

உணவு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமிமனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்க சிகிச்சைகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்த பிறகு மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பதைவிட நோயை வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளாத காரணத்தி னாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவை தகுந்த முறைப்படி சமைத்து உண்போமானால் நோய்களை வராமல் தடுக்கலாம். எந்தெந்த உணவுப் பொருள்களில் எந்தெந்த உணவுச் சத்தும் உயிர்ச்சத்தும் இருக்கின்றன என்பதை அறிந்து அந்தந்த உணவுப் பொருள்களை உட் கொள்வோமானால், நோயை வராமல் தடுப்பதோடு உடல் நலத்தோடு இருக்கவும் முடியும் என்பது இந்நூலாசிரியர் அனுபவத்தில் கண்ட உண்மை . இந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான காலம். விஞ்ஞானத்தின் மூலமாகப் பல துறைகளிலும் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பல நன்மைகளைக் கண்டுபிடித்திருக்கி றார்கள். அவ்வாறே உணவுத்துறையிலும் விஞ்ஞானத்தின் மூலமாக ஆராய்ச்சி செய்து எந்தெந்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்களும் விட்டமின்களும் உள்ளன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகளை எல்லோரும் அறிந்தி ருப்பது அவசியமாகும். அவற்றை அறிந்து அதன்படி உணவை உண்பதனாலே தேக ஆரோக்கியத்தைப் பெறலாம், மேலும் நோய் வராமல் தடுக்கலாம் என்னும் கருத்தோடு, பலருக்கும் பயன்படும்படி 'உணவு நூல்' என்னும் இச்சிறு நூல் எழுதப் பட்டது. இந்நூல் பலருக்கும் பயன்படும் என்று நம்பு கிறோம். மயிலை சீனி. வேங்கடசாமி

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.