எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி
எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி
1919 திருக்குறளைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்திலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் வொய்ட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேயர் 1796இல் இந்திய நிர்வாகப் பணித்துறையின் இளம் அதிகாரியாக நம் நாட்டிற்கு வந்து சேர்ந்தார். காலேஜ் அட் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் (College at Fort St. George) எனும் கல்லூரி சென்னையில் தோன்ற மூலகாரணமாக இருந்த அவ்வறிஞர் அக்கல்லூரி நூலகத்திற்காகச் சென்னை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஓலைச் சுவடி வடிவிலிருந்த நூல்களைத் திரட்டியதோடு, நான்கு திராவிட மொழிகளையும் சமஸ்கிருதத்தையும் தாமே அரிதின் முயன்று பழுதறக் கற்றார். தெலுங்கு மொழி பற்றிய அவர் எழுதிய நீண்ட கட்டுரையும் மலையாளம் பற்றி இந்தியன் ஆந்திகொரி (Indian Antiquary)யில் வெளியான கட்டுரையும் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் யாப்பிலக்கணம் பற்றி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஆய்வேடு அச்சாக வில்லையென்று அறிகிறோம். தென்னிந்திய வரலாறு பற்றி அவர் சேகரித்திருந்த ஆய்வுக் குறிப்புகள் நூலாக்கப் பட்டிருந்தால் அது பல சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்கு மென்று வரலாற்றறிஞர்கள் கூறுவர். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவரென்பதற்குச் சான்றுகளை அவரது திருக்குறள் மொழி பெயர்ப்பில் காணலாம். இளம் வயதிலேயே எதிர்பாராத முறையில் இராமநாதபுரத்தில் நச்சுணவை உண்டதால் 1619 இல் இவர் மரணமடைந்தது தமிழுக்குப் பேரிழப்பாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.