தப்புத் தாளங்கள்
தப்புத் தாளங்கள்
தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகின்றவர்களைக் கூட தடம் மாற்றும் தகுதியுடையது. இந்நூல். பண்டிதர்கள், அறிஞர்கள், மேதைகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பழம் பெருமைப் பேசுவோர் என்று பலதரப்பாரின் அறியாமையைக் கூட இந்நூல் அகற்றும காலங்காலமாய் நாம் சரியென்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவை, எவ்வளவு தவறானவை என்பதைத் தெளிவாய்த் தெரிவிக்கின்றது இந்நூல்! படித்து முடித்தால் பார்வை மாறும் எண்ணம் மாறும், முடிவும் மாறும், கொள்கை மாறும், நம்பிக்கைகள் மாறும், நடப்பும் மாறும், பழக்கம் மாறும், அளவு மாறும், காலம் மாறும், வயது மாறும், வாழ்வே மாறும். ஆம், அறிவு வழியில், உண்மை வழியில், உரிய வழியில், உயரிய வழியில் அனைத்தும் மாறும் அந்த மாற்றம் ஏற்றத்திற்கு உதவுவதாய், வாழ்விற்கு வித்திடுவதாய், அறிவிற்கு உகந்ததாய், ஆக்கத்திற்குத் துணை | நிற்பதாய் இருக்கும்