தமிழதிகாரம் கலைஞர் காப்பியம்
தமிழதிகாரம் கலைஞர் காப்பியம்
'நெஞ்சுக்கு நீதி' யெனும் தன் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், தொல்காப்பிய ஆய்வுகள் என தமிழாய் தமிழுக்காக வாழும் இந்தத் தமிழர் இனக் காவலர் வாழ்வே தமிழ்....
அரசியல் கிடக்கட்டும், வேறு யார் ஆண்டாலும் இந்த அளவிற்குத் தமிழ் வளருமா? சங்கம் வைத்த பாண்டியனுக்கு நிகரான தமிழ்ச் சோழன் பணி இது....
நூலகத்திற்கு 1000 நூல்கள், கண்காட்சிக்கு இடம், பதிப்பகத்திற்குப் பரிசு, எழுத்தாளர்க்கு அதிகப் பரிசு, விருது, நலிவடைந்த மூத்த படைப்பாளிக்கு நிதியுதவி, சிறந்த படைப்பாளியின் படைப்பு தேசிய மயமாக்கல், மொழிப்போர் தியாகிக்கு உதவி...
அப்பப்பா .....
தெருவெங்கும் தமிழ்முழங்க பாரதி கண்ட கனவு இவரால்தானே நனவாகியது....
முத்தமிழ்க் கலைஞர்தான் மு.க. என்றால் மிகை யல்லவே. வெள்ளிக்கிழமை - புதையல் - எனும் சமூக நாவல், ரோமாபுரிப் பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்றுப் புதினம், சிலப்பதிகார மறு ஆக்கம் என இவர் படைப்புகள் காலத்தால் அழியாதவை.