
தமிழ் மொழியின் வரலாறு
தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டோருதாரணமே காட்டியிருக்கின்றேம். இன்னும் இந்நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம். இஃது எழுதுமிடத்து எமது இயற்றிமிழ் மாணவர் செய்தவுதவி யொருபொழுதும் மற்க்கற் பாலதன்று. அறிவெனப் படுவது பேதையார் சொன்னேன்றல் என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னுந் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகிறேம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.