சுயமரியாதையை சுவாசிக்க... வாசிக்க...
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
சுயமரியாதை இயக்கம் என்பது தமிழ்நாட்டில் சுமார் 2, 3 வருஷங்களாகப் பெரிதும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்குள் பரவி வரும் ஒருவித சமரச உணர்ச்சியும், அறிவு வளர்ச்சியுமேயாகும். இந்தச் சமரச உணர்ச்சியும், அறிவு ' வளர்ச்சியுமானது நமது மக்களுக்குத் தங்களை அந்நிய ஒரு வகுப்பார் சமூக வாழ்க்கையில் இகத்திலும் ஆத்மார்த்தம் என்னும் வாழ்க்கையில் பரம் என்பதிலும் முறையே தாழ்த்தி இழிவுப்படுத்தியும், ஏமாற்றியும் வைத்து வாழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற முடிவான கருத்தின்மேல் ஏற்பட்டதேயாகும். . இவ்வியக்கம் எந்த ஒரு தனிப்பட்டநாட்டிற்கோ, சமூகத்திற்கோ என்பதாக இல்லாமல் பொதுவாகத் தாழ்த்தப்பட்டும், இழிவு செய்யப்பட்டும் தன்மான உணர்ச்சி உண்டாகாமல் அழுத்தப்பட்டும் பகுத்தறிவை வளர்ச்சி செய்யாமல் தடை செய்யப்பட்டும் இருக்கும் எல்லா மக்களுக்கும் கொடுங்கோன்மையில் அடக்கி ஆளப்பட்டு வரும் மக்களுக்கும் பயன்படும்படியான முறையில் அமைக்க விரும்பியே இதில் பிரவேசித்துள்ளோம்.