சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற்பதும் அந்த மலையே. நூறாண்டு காலம் நமக்குப் பயன்பட்டது மலையின் முகடு மட்டுமே. எதிரிகளும் துரோகிகளும் ஓய்ந்து போனதும் மலையின் முகட்டளவில் தான். கடல்நீராகிய மக்களின் வாழ்வில் முழுவதும் புலப்படாமல் முகடு மட்டும் தெரிய வெளிப்படுகிறது மலையின் வடிவமும் அழகும். தோண்டத் தோண்டத் தொல்பொருள் வரலாறு நம் பரப்பில், அடுக்கடுக்காய்ப் புத்தொளி தெறிக்கும் நன்நீர் அந்த மலையினிடத்தில். மலையின் பெயர் ஈ.வெ.ராமசாமி