
பெரியார் எனும் இயக்கம்
பெரியார் எனும் இயக்கம் - Tha.Pandian
தந்தை பெரியாரை, கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர் எனும் குறுகிய சிமிழுக்குள் அடைப்பது மிகத் தவறு என்கிறார் நூலாசிரியர். மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி-மத ஒழிப்பு, சுயமரியாதை, சுயசிந்தனை, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற மனிதச் சமுதாயத்தின் அனைத்து நிலையிலும் சிந்தனை செலுத்திச் செயலாற்றியவர் பெரியார் என்கிறார். இந்நூலில் பெண் விடுதலையைக் குறித்துப் பெரியார் சிந்தித்த தையும் செயலாற்றியதையும் நூலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். அச்சிந்தனை பெரியார் காலந்தொட்டு இன்றளவும் வளர்ந்து பெருகிக் கொண்டிருப்பதைத் தக்க தரவுகளுடன் விளக்கி யிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.