பயணம் - முதற்பாகம் (கடமை)
தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம் ஆகும். இதனைப் பண்டிதர், ‘'சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே, முதல் நூலென்றும், அது சிறந்ததென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்’' என்று வேதனையுடன் குறிப்-பிடுகின்றார். இக்குறையைக் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும், பழந்தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும், தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நுணுக்கங்களையும் ஆய்ந்து அறிந்து, கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.