மொழியும் வாழ்வும்
சிந்தனையை மொழியின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், மொழியின் மூலமாகத்தான் சிந்திக்கிறோம் என்பது இரண்டாவது. பேச்சுதான் மொழி, பேசவில்லையென்றால் மொழி இல்லை என்று கூற முடியாது. மவுனம் கூட மொழிதான். மவுனம் என்பது உள்ளே நிகழ்கின்ற உரத்த பேச்சு. இன்னமும் சரியாய்ச் சொன்னால், அதிகமாகப் பேசுவதில்லை என்றால், அதிகமாகப் பிறரிடம் பேசுவதில்லை என்று பொருள். அதிகமாகப் பிறரிடம் பேசாதவர்கள் தமக்குள் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகும். எவன் தனக்குள் கூடுதலாகப் பேசுகிறானோ அவன் ஆழமாகச் சித்திக்கிறான் என்று பொருள். எனவே மவுனம் என்பது மொழியிலிருந்து அந்நியப்பட்டது அன்று. மொழியை விட்டு நீங்கள் முற்றிலுமாக விலக வேண்டுமானால் நினைவிழந்து போக வேண்டும். நினைவிருக்கிற வரையில் உங்களோடு மொழி இருக்கும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.