குற்றம், தண்டனை, மரண தண்டனை
அ.மார்க்ஸ் (சென்னை):
மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற ஆக்கச் சிந்தனைகள் விதந்தோதப்பட்ட தமிழகத்திற்குள் ஈழப் பிரச்சினையை மட்டும் முன்வைத்து பேரறிவாளனின் மரண தண்டனைக்கெதிராக மட்டும் போராடிக் கொண்டு அஃப்சலின் மரணத்தைக் கண்டு கொள்ளாததோடு, அப்சலுக்கு தண்டனை வழங்கியதில் பெரும் முனைப்புக் காட்டியது பா.ஜ.க. இந்து வெறி கொலைகாரக் கும்பல். ‘தீர்ப்பெழுதும் போதே நீதி செத்துவிடுகிறது’ என்கிற உன்னதமான மனித உரிமை முழக்கத்தை நீண்ட காலமாய் முன்வைத்து இயங்கிவருகிற அ.மார்க்ஸின் மரண தண்டனைக்கெதிரான தத்துவ, அரசியல், பண்பாட்டினை நிலைப்பாடாய் கொண்டுள்ள ‘குற்றம், தண்டனை, மரண தண்டனை’ என்னும் இக்கட்டுரைகளையும் அஃப்சலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளித்த காலத்தில் வெளியான அவரது ‘அஃப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?’ என்கிற தொகுப்பினையும் இணைத்த முழுநூலாக வந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.