Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கற்பு கலாச்சாரம்

Original price Rs. 0
Original price Rs. 38.00 - Original price Rs. 38.00
Original price
Current price Rs. 38.00
Rs. 38.00 - Rs. 38.00
Current price Rs. 38.00

தமிழ் இலக்கியங்களில் பெரிதும் போற்றப்பட்டு வந்த 'கற்பு' இன்று பெண்ணிய நோக்கில் தெளிவாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. வளமான வளர்ச்சிக்கு இத்தகு மறுபரீசீலனைகள், விவாதங்கள் அவசியமாகின்றன. பெண்ணிய பார்வையில் கற்பு' என்ற பெண்ணியவாதிகள் 'கற்பு' என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு இயல் அணுகி ஆராய்கின்றனர் என்பதையும். அதன்வழி 'கற்பு' எவ்வாறு அடிமைக் கோட்பாடாக உணரப்படுகிறது என்பதையும், எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் இன்று, கற்பு பற்றிய இலக்கியக் (மத) கண்ணோட்டம், சமூகவியல் கண்ணோட்டம், பெண்ணியக் கண்ணோட்டம் என்று பல கண்ணோட்டங்கள் பரவிக்கிடக்கின்றன. இவற்றைச் செவிமடுக்கும் மக்கள், எதை இவர்கள் கண்ணோட்டமாகக் கொண்டுள்ளனர் என்பதை அறிய, அவர்களிடையே 'வினாநிரல்' கொடுத்து வாங்கப்பட்டது. அதில் வந்த முடிவுகள் 'மக்கள் கருத்துக் கணிப்பில் கற்பு' என்ற இயலில் பேசப்படுகிறது. 'கற்பு' என்ற சொல் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெருவழக்காக வழங்கி வருகிறது. இச்சொல், பதிவிரதா தர்மம், களவுக் கூட்டத்துக்குப்பின் தலைவன், தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம், கல்வி. தியாகம். வேலைப்பாடு, சங்கற்பம், ஆணை, கதி என்ற எட்டுப் பொருள்களில் இலக்கியங்களில் கையாளப் பட்டுள்ளதை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறது தமிழ் லெக்சிகன்.' வின்சலோ தமிழ்-ஆங்கில அகராதியும், கழகத் தமிழ் அகராதியும் 'கற்பு', என்ற சொல்லுக்கு முறைமை, விதி, மதில், நீதிநெறி, கற்பனை என்ற பொருள்களைத் தருகின்றன.? 'கற்பு' என்பதற்கு 'முல்லைக் கொடி' என்ற பொருளைத் தருகிறது இலக்கியச் சொல் அகராதி.3 குசேலாபாக்கியானம் என்ற நூலில் இப்பொருளிலேயே இச்சொல் கையாளப்படுகிறது. இலக்கியங்களில் மேற்கூறியவாறு பல்வேறு பொருள்களில் 'கற்பு' என்ற சொல் கையாளப்பட்டிருந்தாலும், 'ஒழுக்கம்' என்ற பொருண்மையிலேயே பெரும்பான்மையாக எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த ஆய்வும் 'கற்பு' என்பதை ஓர் ஒழுக்கக் கூறாக மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்துள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Dr.Ra.Prema
பக்கங்கள் 136
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2000
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெண்மை என்றொரு கற்பிதம்

பாரதி புத்தகாலயம்
In stock

பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன?ஆண்மை - பெண்மை என்பதெல்லாம் இயற்கையில்வந்தவையா? நாகரிக சமூகமாக மனிதன் 'வாழத்தொடங்கிய பின் கட்டமைக்கப்பட்டவை...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

பழந்தமிழர் நாகரிகம்

சாரதா பதிப்பகம்
In stock

எந்த மொழிக்கும் முந்தைய மொழியாக தமிழ்த் திகழ்வது. பல மொழிகளும் தோன்றாதிருந்த காலத்திலேயே நாகரிகமும் பண்பாடும் நிறைந்திருந்த மக்கள் வாழ்ந்த நாட்டில்...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 720.00 - Original price Rs. 720.00
Original price
Rs. 720.00
Rs. 720.00 - Rs. 720.00
Current price Rs. 720.00

சங்கத் தமிழ்

திருமகள் நிலையம்
In stock

கலைஞர், கவிஞர், மூதறிஞர் மு. கருணாநிதி அவர்களின் "சங்கத் தமிழ்""சங்கத் தமிழ்'' என்னும் நூல், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமி...

View full details
Original price Rs. 720.00 - Original price Rs. 720.00
Original price
Rs. 720.00
Rs. 720.00 - Rs. 720.00
Current price Rs. 720.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்

Paalam
In stock

முன்னுரை 'தொல்காப்பியரின் காலம் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்; அதுபற்றி நீங்கள் ஒரு கட்டுரை தாருங்கள்; உங்கள் கட்டுரை விவாதத்தின் மையப்பொருளாய...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்

தடாகம்
In stock

தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும் தாய்வழிச் சமூகமாக பன்னெடுங்காலமாக தன் இயல்பில் மாறாது வாழ்ந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சமூகத்தின் கட்டமைப்பானது,...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00