கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா?
இந்தக் கட்டுரைக்கான எனது பொருள் தேர்வு கிங்க்ஸ்லி மார்ட்டினின் ஆர்வத்திற்கு உரியதாக இருந்திருக்கலாம் என்று நான் எண்ணியதால் எழுந்தது; கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையேயான கலந்தாய்விற்கு இந்த காலக்கட்டங்கள் தொடர் பாகப் பணியாற்றும் வரலாற்றாளர்களுக்கிடையே தொடர்ந்த விவாதம் தேவை என்ற எனது அக்கறையிலிருந்தும் இது எழுந்தது. ஏற்கெனவே நிலவியதைவிட, கடந்த காலம் தொடர்பான கிரகிப்பு வரம்பை காலனிய ஆட்சி அனுபவம் மாற்றியுள்ள பின்காலனியச் சமூகங்களுக்கு அத்தகைய விவாதம் அநேகமாக மேலும் பொருத்தமாக இருக்கும்; வெறும் வரலாற்றியல் ஆர்வத்திற்கு மேலதிகமான மாற்றாக அது இருக்கும். இந்த கிரகிப்பை அரசியல் சித்தாந்தங்கள் தங்களுடையதாக்கிக் கொண்டு, காலனிய ஆட்சிக்கு முந்தைய கடந்த காலத்திலிருந்து நியாயத்தைத் தேடும்போது, இந்த செய்முறை மீதான வரலாற்றாளரின் கருத்து அவசியமாகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.