இந்து மதத் தத்துவமும் மனு தர்மமும்!
பொருளாதாரப் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் இந்து மதத்தில் மூன்று விஷயங்கள் துல்லியமாகத் தெரிகின்றன. முதலாவதாக, இந்து மதம், தனிமனிதன் விருப்பப்பட்ட தொழிலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுக்கிறது. மனுவின் சட்டத்தில் மனிதனது தொழில் அவன் பிறப்புக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இந்து மதம் இந்த விஷயத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருவதில்லை. இன்னாருக்கு இன்ன தொழில் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விடுதால் திறமைக்கோ விருப்பத்துக்கோ இடமே கிடையாது.
இரண்டாவதாக, மற்றவர் தேர்ந்தெடுத்த இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குப் பணியாற்றும்படி இந்து மதம் மக்களைக் கட்டாயப்படுத்துகிறது. மனு, சூத்திரன் உயர் சாதிக்குத் தொண்டூழியம் செய்யவே பிறந்தவன் என்கிறார். இதையே அவன் தனது குறிக்கோளாகவும் ஏற்கவேண்டுமெனக் கூறுகிறார்.
-டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்