
இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்
இந்திய தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் என்ற இந்நூலில் தத்துவத்தின் துவக்கத்தை வரலாற்றுப்பொருள் முதல் வாத ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர். இந்தியாவிலும் கிரேக்கம் உள்ளிட்ட இதர பல ஐரோப்பிய நாடுகளிலும் ஆரம்பம் முதலே இருவேறு தத்துவ பிரிவுகள் தோன்றியதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்திய தத்துவ மரபில் உள்ள பொருள்முதல்வாதம், கருத்து முதல் வாதம் இவற்றிற்கிடையே உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றை மார்க்சிய வழியில் புரிந்துகொள்வதற்கு நமக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்நூலை மறுபதிப்பு செய்துள்ள அலைகள் வெளியீட்டகம் பாராட்டுக்குரியது. பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.