இந்திய சூழ்நிலையில் புவி வெப்பமடைதல்
இந்தக் கையேடு வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த வெவ்வேறு மக்கள் மற்றும் சக செயற்பாட்டாளர்கள் உடனான உரையாடல்கள், பொதுக் கூட்டங்கள், செயற்பாட்டாளர் அறிக்கைகள், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு அரசு மற்றும் இதர மாநில அரசுகளின் செயல்திட்டங்கள், இந்தியாவின் ஐ.என்.டி.சி (INDC, தேசங்கள் தத்தமளவில் தீர்மானித்த பங்களிப்பு) மற்றும் இதர அரசாங்க வெளியீடுகள், ஐ.பி.சி.சி-யின் (IPCC, தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு) அறிக்கைகள், பதிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. கல்வியல் தன்மை இல்லாமலிருக்க பின்குறிப்புகள் வழங்குவதை தவிர்த்துள்ளேன். ஆவணங்களின் பட்டியல் கையேட்டின் முடிவில் வழங்கப்பட்டுள்ளது.
நகரங்களிலும் மாநகரங்களிலுமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை கருதியே இந்தக் கையேடு எழுதப்பட்டது. மேலும், புவி வெப்பமடைதலை குறித்த ஒரு அடிப்படைக் கண்ணோட்டத்தை எதிர்பார்க்கும் எவருக்கும் இது பயனளிக்கும்.
- நாக்ராஜ் ஆத்வே, மார்ச் 2017
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.