கிராம சபை: அடிப்படை கேள்விகளும் பதில்களும் (Pocket Size)
தன்னாட்சி
'உள்ளாட்சியில் நல்லாட்சி உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி' என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் 'தன்னாட்சி', உள்ளாட்சியைக் குறிப்பாகக் கிராம ஊராட்சியை, 'எளிய மக்கள் தங்களுக்காகத் தாங்களே நிர்வாகம் செய்யும் அரசாக' மாற்ற முயலும் ஒரு மக்கள் இயக்கமாகும். உள்ளாட்சிகளுக்காக, கிராம சபைக்காகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் செயற்பாட்டாளர்களால், 2018 முதல் சங்கமாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது தன்னாட்சி. விளிம்பிலும் விளிம்பு நிலையிலுள்ள கடைக்கோடி குடிமக்களும் தங்கள் அரசை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரத்தையும் தகவல்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அதிகாரப் பரவலைக் கொள்கையாகக் கொண்டு இயங்கும் இயக்கம் தான் நம் 'தன்னாட்சி'.
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி! 'உள்ளாட்சியில் தன்னாட்சி'! என்பது வெற்று முழக்கமல்ல... நாம் வென்றெடுக்க வேண்டிய லட்சியம்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.