கெட்டிக்காரக் குட்டித்தவளை
அவசரமான நம் வாழ்க்கை முறையில் ,குழந்தைகளையும்,குழந்தைத்தன்மையையும் கொண்டாட நமக்கு நேரம் உள்ளதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் பெரும்பாலும் இல்லை என்பதே.குழந்தைகளின் உலகம் சின்ன சின்ன சந்தோஷங்களால் நிறைந்தது.அந்தக் காலங்களில் தாத்தா, பாட்டி ,அத்தை ,மாமாக்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உறவுப் பாலமாகக் கதைகள் இருந்தன என்றால் மிகையாகாது.
வாழ்வாதாரச் சூழலில் உறவு வட்டங்கள் சுருங்கும் தற்காலச் சிறார் உலகத்தின் ஆகச்சிறந்த கொண்டாட்டம் என்பது தரமான கதைகளைக் குழந்தைகள் படித்து,கேட்டு,கற்பனை செய்து ரசிப்பதாகும்.
சிறார் உலகத்தை புரிந்து கொண்டு ,அதனை வண்ணமயமாக்கும் முயற்சியில் சிறந்து விளங்கும் பல்வேறு சிறார் படைப்பாளிகளின் வழியில் நானும் என்னால் முடிந்த ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறேன் .இறைவனின் கருணையுடன் இந்தப் பயணத்தை தொடர முற்படுகிறேன்.
நன்றி.