திராவிடம் அறிவோம்:Vetrichelvan
திராவிடக் கருத்தியல் தோன்றிய காலம் தொட்டே அவற்றின் மீதான பொய்கள், திராவிடத் தலைவர்கள் மீதான கட்டுக்கதைகள், திராவிட இயக்க வரலாற்றை முலாம் பூசி பரப்புதல் போன்ற செயல்களைச் சனாதனச் சக்திகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் குறிப்பாகச் சமூக வலைதளங்களில் உண்மைச் செய்திகளுக்கும், திரிபுச் செய்திகளுக்கும் வேறுபாடு தெரியாமல், ஆராயாமல் பெரும்பாலும் திரிபுச் செய்திகளே தொடர்ச்சியாகப் பலராலும் பரப்பப்படுகின்றன.
இயந்திரமயமான உலகில் பொறுமையாக, அதிகப் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வாசிப்பதற்கு புதிய வாசகர்கள் தடுமாறுகின்றனர். இதனால் பல நேரங்களில் புத்தக வாசிப்பைத் தவிர்ப்பதையும் காணமுடிகிறது. காலத்தின் தேவை கருதியும், உண்மையான திராவிட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆதாரத்தோடு கொண்டுசேர்த்தலின் அவசியத்தை உணர்ந்தும், வரலாற்றுச் செய்திகளை இந்நூலாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர் வெற்றிச்செல்வன்.