
திராவிட மொழிகளில் ஆராய்ச்சி ( இரண்டாவது பதிப்பு )
தமிழ்ப் பேரகராதித் திட்டத்தில் பணியில் சேர்ந்த நாள் (25. 11. 1926) முதல், சென்னைப் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாள் (11.10.1946) முடிய இருபது ஆண்டுகள் முழுநேரமும் தமிழியல் ஆய்வு தொடர்பாக சிந்தித்தவராகவே இருந்தார். இக்காலங்களில் உள்வாங்கிய தமிழியல் குறித்த மனப் பதிவுகளை இவ்விரு மாநாட்டுத் தலைமையுரைகளாக வெளிப்படுத்தியுள்ளார், திராவிட இயல் ஆய்வு முழு அங்கீகாரம் பெறாத சூழலில், திராவிட மொழி மற்றும் கலை இலக்கியம் குறித்து அகில இந்திய அளவில் கவனத்தைக் கோரும் வண்ணம் இவ்வுரை களை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரைகள் நவீனத் தமிழியல் ஆய்வின் அடிப்படை ஆவணங்களாக உள்ளன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.