
திராவிட இயக்கத்தின் பெண் விடுதலை
உலகெங்கிலும் பெண்ணுலகம் தம்மை விடுவித்துக் கொள்ள எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும், இந்தியப் பெண்கள் எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. பெண்களின் சிந்தனை என்பது 'பெண்ணுக்குரிய சிந்தனை'யாக வந்திருக்கின்றது. இவை மரபுச் சிந்தனைகளாக, பண்பாட்டுச் சிந்தனைகளாக, மதத்தின் வழியாக மாற்றப்பட்டுப் பெண்கள் எந்நாளும் அதைக் கைவிட்டு விடாத
அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மதத்தின் வழியாகப் பகுக்கப்பட்ட சாதிவழிச் சமுதாயத்தில் பெண்கள் பிறப்பு முதல் மதவழிப் பண்பாட்டுச் சுமையைத் தூக்கிச் சுமக்க வேண்டியுள்ளது. பெண்களின் பிறப்புரிமை மறுக்கப்படுகிறது எனில் இதன் அடிப்படைக் காரணமே மதத்தின்வழியாகச் சாதியின்வழியாகப் பிணைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பே இதற்குக் காரணம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.