
Dr.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஈடுஇணையற்ற ஜோதியாக அம்பேத்கர் விளங்கினார். அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்ட மக்கள். தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அம்பேத்கர் என்ற உண்மை இந்திய உபகண்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.