
அருந்ததியர்களாகிய நாங்கள்
சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழுவின் முன் ஒரு சாட்சியமாக இந்நூல் முன்வைக்கிறது.சமூகப் பொருளாதார வளங்களை பகிர்ந்தளிக்கும் நல அரசுகளின் சட்டமியற்றும் அவைகளிலிருந்து நீண்ட நெடு காலங்களாய்
விலக்கப்பட்ட அருந்ததியர்களின் இருப்பையும் பேசுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.