
19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
சூழ்நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தக்கவாறு மனிதரின் பண்பாடும் நாகரிகமும் அமைவதுபோலவே. இலக்கியங்களும் அந்தந்தச் சூழ்நிலை சுற்றுச் சார்புக்குத் தக்கவாறு அமைகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் அந்த நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ந்திருக்கிறது. அரசியல் சூழ்நிலை, வாழ்க்கைச் சூழ்நிலை, சமயங்களின் சூழ்நிலை, மேல்நாட்டுத் தொடர்பு முதலியவற்றினாலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கியம் பெரிதும் வளர்ச்சி படைந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலைகளைச் சுருக்கமாகவேனும் அறிந்தால் தான் அந்த நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.