
வடுகபட்டி முதல் வால்கா வரை
சோவியத் பயணம் என்றதும் வைரமுத்துவின் உள்ளத்தில் ஒரு பரவச நதி; கண்களில் ஆச்சரியப் பிரவாகம். சோவியத்! காகிதத்தில் தங்கியிருந்த ஒரு சித்தாந்தத்துக்கு முதல் முறையாகச் செயல் வடிவம் கொடுத்த மானுட அற்புதம். சோவியத்தை ஆதரித்த ஒவ்வோர் உள்ளத் தையும் மானுடம் ஆராதித்தது. சோவியத்தின் நதிக்கரைகளில் மனித நாகரிகம் உச்சம் தொட்டது. தன் வாழ்வின் மதிப்புமிக்க தருணங்களை உருவாக்கியது சோவியத் பயணம் என்கிறார் வைரமுத்து. நம் மனதின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து இதுவரை அனுபவித்திராத ஒரு சிலிர்ப்பை ஒவ்வோர் உயிரணுவிலும் ஏற்படுத்து கிறது இந்தப் பயண நூல். இதோ! ஒரு புதிய உலகத்தின் மந்திரச்சாவி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.