
உல்லாசச் திருமணம்
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதியுள்ள புத்தகம் Mariage de plasir (in French). இதனை "உல்லாசத் திருமணம்" என்பதாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பேரா. சு. ஆ. வெங்கட சுப்பராய நாயகர். இந்நாவலின் கதைக்களம் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ. கதையின் நாயகர் ஆப்பிரிக்க வெள்ளை நிற வணிகர். நாயகி ஆப்பிரிக்கக் கறுப்பினப் பெண். இருவருக்குமிடையே உள்ள அகஉணர்வுகளான காதலும் இல்வாழ்க்கையும் நிறவேறுபாட்டால் சிதைபடுவதும் சிக்கல்கள் அவர்களையும் தாண்டி மூன்று தலைமுறைவரை நீண்டு செல்வதுதான் கதை.
நாவலைப் படித்தால் உங்களது உள்ளுணர்வுகள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கும் கேள்விக்கான பதிலையும் நீங்கள் தான் தேட வேண்டியிருக்கும். இந்நூல் இனிமையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவசியம் படியுங்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.