
சூத்திரர்கள் யார்?
தொடக்கத்தில் அவர்கள் ஆரியர்கள் அல்ல என்ற வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால்கூட ஏனைய மூன்று ஆரிய வகுப்பினருடன் அவர்கள் பரந்த அளவில் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டு ஆரியமயமாகிவிட்டது மட்டுமன்றி, சில நிகழ்ச்சிகள் காட்டுவது போன்று. அவர்கள் தாங்கள் இழந்ததைவிடவும் அதிகம் பெற்றனர் என்பதில் சந்தேகமில்லை.
அது மட்டுமல்ல. சூத்திரர்கள் எனத் தற்போது வழங்கப்படும் சில குலமரபுக் குழுவினர் உண்மையில் பிராமணர்களும், சத்திரியர்களுமே ஆவர். சுருக்கமாகக் கூறினால். இங்கிலாந்தின் கெல்ட்டிய இனத்தவர் ஆங்கிலோ-சாக்ஸன் இனத்தவருடன் கலந்துவிட்டது போன்று இவர்களும் ஆரிய இனத்துடன் கலந்துவிட்டனர்: அவர்களுக்குத் தனித்தன்மை என்று ஏதேனும் இருந்திருக்குமானால் அதனை முற்றிலுமாக அவர்கள் இழந்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.