
சட்ட மேதை அம்பேத்கர் 100
தனக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளை காந்தி சொல்லிய போதெல்லாம் முரண்பாட்டின் வீரியத்தோடு மோதிப்பார்த்தவர் அண்ணல் அம்பேத்கர். மனசு மலராத குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தைக் கருக்கிய கொடுமை தொட்டு, தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலே யே வெந்து கருக விட்டு விடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்களின், கொள்கைகளின் தொகுப்பை 'சட்டமேதை அம்பேத்கர் 100 என்ற தலைப்பில் வரலாறாகப் படைத்துக் கொடுத்திருக்கிறார் தம்பி மதி என நான் பாசத்துடன் அழைக்கும் ஆர்.சி.மதிராஜ்.தம்பி மதிக்கு கவிச்சிந்தனையும் உண்டு, கணினியில் புலமையும் உண்டு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.